என்எல்சி விபத்து.! உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு- என்எல்சி அறிவிப்பு.!

NLC விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு என்றும்,

By murugan | Published: Jul 02, 2020 06:34 PM

NLC விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை என என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும்,  15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடுஎன்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc