‘ரூ 27,205,88,00,000 ஒதுக்கீடு’ “683 உதவி பேராசிரியர்கள் நியமனம்” உயர்கல்வித்துறை அமைச்சர்..!!

41 பல்கலைக்கழகு உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் விரைவில் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி ; தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். மலர்விழி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.அனைவருக்கும் சமமான கல்வி அனைவருக்கும் உயர் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் 16 வகையான பொருட்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

முதலமைச்சர் சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டு முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிற்குள் ரூ.152.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் 68 இளங்கலை, 60 முதுகலை, 136 ஆய்வு பாடப்பிரிவுகள் என மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். 683 உதவி பேராசிரியர்கள் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசிற்கு ரூ.68.46 கோடி செலவாகும். அதுமட்டுமில்லாமல் இப்பாடப்பிரிவிற்கு தேவைக்காக ரூ.62.75 கோடியில் 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்து தரப்படும் என அறிவித்துள்ளார்.

பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் பல்கலைகழக உறுப்புக் கல்லூரிகள் கலைக்கல்லூரியாக மாற்றம் செய்யப்படுவதால் இங்கு பயிலும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டு முதல் குறைந்த கல்வி கட்டணத்தில் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

DINASUVADU

Dinasuvadu desk

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

1 hour ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

5 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

5 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

5 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

5 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

6 hours ago