ரூ.2500 பணம், பொங்கல் பரிசு தொகுப்பு !இன்று முதல் வழங்கப்படுகிறது

இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்  தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுப்பணம் ரூ.2500 வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார்.

ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் 2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இதற்காக தமிழக அரசு ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.அதாவது முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.அதன்படி டோக்கனும் வழங்கப்பட்டது.

இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்  தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுப்பணம் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.  இன்றைய தேதிக்குரிய டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே இன்று பொருட்கள் வழங்கப்படும்.மீதமுள்ளவர்களுக்கு எந்தெந்த தேதியில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த தேதியில் தான் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடைசி நாளான 13-ஆம் தேதி அன்று டோக்கனில் குறிப்பட்ட நாள் படி பொருட்கள் வாங்க முடியாதவர்கள் சென்று வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கார்டு வைத்துள்ளவர்கள் விரல் ரேகை கட்டாயமில்லை என்றும்  கார்டு மற்றும் டோக்கன் கொண்டுவந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

19 mins ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

21 mins ago

முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை கெளரவித்த கூகுள் டூடுல்.!

Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…

28 mins ago

ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” – இழப்பீடு வழங்க உத்தரவு!

A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…

30 mins ago

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத் ? பெங்களுரூவுடன் இன்று பலபரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…

2 hours ago

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

12 hours ago