நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி விடுவிப்பு – அமைச்சர் ஐ பெரியசாமி

28ம் தேதிக்குள் தகுதியானவர்கள் அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல். 

தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 5 சவரனுக்கு உட்பட்ட பொது நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் பெரியசாமி விளக்கமளித்தார்.

அப்போது பேசிய கூட்டுறவுத்துறை  அமைச்சர் ஐ பெரியசாமி, நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ரூ.1000 கோடி விடுக்கப்பட்டது. இதுவரை 5,48,000 கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு 31-ஆம் தேதிக்குள் தள்ளுபடி ரசீது தர திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், 28ம் தேதிக்குளேயே ரசீது தரப்படும் என நம்பிக்கை இருப்பதாகவும்  கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்