• சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து தோனியை முந்தியுள்ளார் இந்தியாவில் ரோஹித் சர்மா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் 2 சிக்சர்களை விளாசினார் ரோஹித். இதன் மூலம் அவர் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் மொத்தம் தற்போது வரை 218 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இதற்கு முன்னதாக 217 சிக்சர்கள் அடித்து இருந்த தோனியை முந்தியுள்ளார்

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து இந்திய வீரர்களின் பட்டியல்:

  1. ரோகித் சர்மா – 218 சிக்சர்கள்
  2. தோனி – 217 சிக்சர்கள்
  3. டெண்டுல்கர் – 190 சிக்சர்கள்
  4. கங்குலி – 189 சிக்சர்கள்
  5. யுவராஜ் சிங் – 153சிக்சர்கள்