சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் ரோஹித் சர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரோஹித் சர்மா, படைத்துள்ளார்.

நேற்று வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். 35 வயதான ரோஹித் சர்மா, சர்வதேச அளவில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்துள்ளார்.

கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 553 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 256 சிக்ஸர்கள், டெஸ்ட் போட்டிகளில் 64 சிக்ஸர்கள், மற்றும் டி-20 போட்டிகளில் 182 சிக்ஸர்கள் என ஒட்டுமொத்தமாக 502 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

476 சிக்ஸர்களுடன் ஷாஹித் அப்ரிடி, 3-வது இடத்தில் இருக்கிறார். 398 சிக்ஸர்களுடன் பிரண்டன் மெக்கல்லம் 4-வது இடத்திலும், 383 சிக்ஸர்களுடன் மார்ட்டின் கப்தில் 5-வது இடத்திலும், எம்.எஸ்.தோனி 359 சிக்ஸர்களுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment