ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ்…! இனிமே வீட்லயும் செய்யாலாம்…!

அசத்தலான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று  பார்ப்போம்.

பொதுவாகவே நம்மில் சிறியவர்கள் முத பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை வைத்து செய்யும் அனைத்து உணவுக்களையுமே விரும்பி சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று  பார்ப்போம்.

தேவையானவை

  • பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
  • பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • தக்காளி – 1 நறுக்கியது
  • மிளகு தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  • கார மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • முட்டை – 3
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை போட்டு கிளறிக் கொள்ள வேண்டும். பின் மிளகு தூள், மஞ்சள் தூள், கார தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து அரை வேக்காட்டில் கிளற விட வேண்டும்.

பின் அதனுள் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும். பின் நன்கு பொரிந்ததும், கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.