பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனாவால் ஒரே நாளில் 903 பேர் பலி..!

பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனாவால் ஒரே நாளில் 903 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடு பிரேசில். இங்கு தொற்று எண்ணிக்கை இந்தியாவை விட குறைவு. ஆனால், பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமாக உள்ளது.

பிரேசிலில் தற்போது உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 30,671 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் 903 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,76,645 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 2 கோடியே 6 லட்சத்து 45 ஆயிரத்து 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் பிரேசில் சோகத்தில் உள்ளது. இதுவரை இங்கு கொரோனாவால் 1,95,77,135 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.