அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி அடைபவர் ரிஷி கபூர்..! ஷாருக்கானின் உருக்கமான பதிவு..!

நடிகரான ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தையாவார். இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பல பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்கள் உட்பட பலர் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இளைஞனாக பயமுறுத்தும் இந்த சினிமா உலகில் நுழைந்த போது என்னை பார்த்த விதம் எனக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது. நான் போதுமான திறமைசாலி இல்லையோ என்று பயந்தேன் . தோல்வி என்பது எனக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது இல்லை . ஏனெனில் நான் தோல்வியடைந்தாலும்  மிகப் பெரிய நடிகரான ரிஷிகபூருடன் இணைந்து நடித்திருந்தேன். படப்பிடிப்பின் முதல் நாளில், என்னுடைய சீன் முடிந்து பேக்கப்பிற்காக காத்திருந்த ரிஷிகபூர்,  தனது முகத்தில் அழகான சிரிப்புடன் என்னிடம் வந்து “நீ மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கிறாயே” என்று கூறினார். அன்றே நான் ஒரு நடிகனாக உணர்ந்து விட்டேன். . சில மாதங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்து என்னை அந்த படத்தில் நடிக்க வைத்ததற்காக நன்றி கூறினேன். அவர் எனக்கு எந்த விதத்தில் உந்துசக்தியாக இருந்தார் என்பது குறித்து அவருக்கே தெரியவில்லை. அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளும் மனம் சிலருக்கு மட்டுமே உள்ளது. பல விஷயங்களுக்காக அவரை நான் மிஸ் செய்கிறேன். மிக முக்கியமாக ஒவ்வோரு முறையும் நாங்கள் சந்திக்கும் போதும் என் தலையில் அவர் அன்பான முறையில் தடவி கொடுப்பதே. நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கான அவரை என்றும் என் மனதில் வைத்திருப்பேன். எப்போதும் அன்பு, நன்றி, மிகு‌ந்த மரியாதையுடன் உங்களை மிஸ் செய்கிறேன் என்று கூறியுள்ளார்