ரேசன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி

நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரசு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு. 

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,  கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்கப்படும். கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கை உருவாக்கப்படும். நியாயவிலை கடைகளில் பாக்கெட் மூலம் அரசு வழங்கப்படும் என்றும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இருப்பிடத்திற்கே அஞ்சல் மூலம் அனுப்பப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், நீலகிரி. தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வழங்கும் திட்டம் மேம்படுத்தப்படும். மாநில, மாவட்ட அளவில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களை தேர்வு பரிசு வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 6 அரிசி ஆலைகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்