காசிமேட்டில் மீன் விற்க கட்டுப்பாடு.!

சென்னை காசிமேடு பகுதியில் மின் விற்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணி வரை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை காசிமேடு பகுதியில் மின் விற்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணி வரை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்,

மீன்பிடிக்க செல்ல காசிமேட்டில் இருந்து நாள்தோறும் கடலுக்கு 70 விசைப்படகுகள் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். என்றும்
மேலும் பொதுமக்கள் மீன் துறைமுகத்திற்குள் மீன்வாங்க அனுமதி கிடையாது. மீன்பிடி இறங்குதளத்தில் மீன் விற்பனை செய்ய 50 விசைப்படகுகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்,

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.