Republic Day 2024 : நீதித்துறையின் அடையாளம் ராமர் கோயில்… குடியரசு தலைவர் உரை.!

இன்று 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஒரு நாட்டின் 75வது குடியரசு தின விழா என்பது தேசத்திற்கு உண்மையான வரலாற்று மைல்கல் என குறிப்பிட்டார். மேலும், நீதித்துறை பற்றியும் ராமர் கோவில் பற்றியும் பல்வேறு கருத்துக்களை குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

கலைத்துறையில் சிறந்த சேவை.. விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது.!

” நாம் இந்திய மக்கள் ” எனும் வார்த்தைகளுடன் ஆரம்பித்தார். மேலும், மேற்கத்திய நாடுகளின் ஜனநாயக கருத்துக்களை விட நமது நாட்டின் ஜனநாயக அமைப்பு வலுவாக உள்ளது என கூறினார்.  எவ்வளவு துன்பங்களை சந்தித்தாலும், அதனை கடந்து, நாடு இவ்வளவு தூரம் பயணித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம். ஒரு நாட்டின் 75வது குடியரசு தினம் என்பது தேசத்தின் உண்மையான வரலாற்று மைல்கல்.

நாளை (இன்று) இந்திய அரசியல் அமைப்பின் தொடக்க நாள். ‘நாம் அனைவரும் இந்திய மக்கள்’ என்ற வார்த்தைகளுடன் இன்றைய நாள் தொடங்குகிறது. இந்திய ஜனநாயகத்தை இந்த நாள் முன்னிலைப்படுத்துகிறது. நமது இந்திய அரசியலமைப்பை வடிவமைப்பதில் பங்களித்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை நமது தேசம் நன்றியுடன் என்றும் நினைவு கூறுகிறது.

ஒரு சகாப்த மாற்றம் காணும் நாடாக, புதிய உயரங்களுக்கு செல்லும் பொன்னான வாய்ப்பாக தற்போது அமிர்த கால ஆண்டுகளில் நமது நாடு உள்ளது. நமது நாடு 100வது குடியரசு தினத்தை நிறைவு செய்யும் போது ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளது.

இந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த கர்பூரி தாக்கூர் ஓர் சமூக நீதியின் அயராத உழைப்பாளி. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சிறந்த போராளி.

நமது இந்தியாவின் நாகரீக பாரம்பரியத்திற்கு ஒரு மைல்கல் ராமர் கோவில் கும்பாபிஷேகம். இது மக்களின் நம்பிக்கை மட்டும் அல்ல. நீதித்துறை செயல்பாட்டின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சான்றாகும்.

இந்தியா தலைமையில் 20 நாடுகள் கொண்ட ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது ஒரு மகத்தான சாதனை. இந்த உச்சி மாநாடு உலகளாவிய அரசியலமைப்பில் தெற்கின் குரலாக இந்தியா சர்வதேச குரலுக்கு வலு சேர்த்தது.

கடந்தாண்டு அக்டோபரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா இந்தியா முன்னேற வழி வகுத்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு புரட்சிகரமான கருவி அந்த சட்டமசோதா.

இந்தியாவின் வெற்றி பயணத்தில் இஸ்ரோ முக்கிய பங்காற்றி வருகிறது. சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு, ஆதித்யா L1-இன் வெற்றி பயணமும் பாராட்டுக்குரியது.

நமது உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் மிக முக்கிய பொருளாதாரமா மாறி உள்ளது. இந்த வளர்ச்சியானது 2024 மற்றும் அதற்கு பின்னும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளை 117 பதக்கங்களையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதங்கங்களையும் வென்று சாதனை படைத்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுக்கள்.

நம் நாட்டு இளைஞர்கள் புதிய எல்லைகளை ஆய்வு செய்கின்றனர். அவர்களின் பாதையில் உள்ள தடையை நீக்கி அவர்களின் முழு திறனை வெளிக்கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு, ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் உள்ளிட்டவருக்கு நன்றி தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.