ஊட்டியில் காட்டாற்று வெள்ளதில் உயிரிழந்தோருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்.! ஆட்சியர் அறிவிப்பு.!

ஆனிக்கல் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம். – நீலகிரி மாவட்ட ஆட்சியர்.

உதகமண்டலம்  (ஊட்டி) அருகே ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது,  காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது.

அதில், 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டு இன்று காலையில் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 4 பேரில் 3 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளதால், காணாமல் போன ஒரு பெண்ணை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment