#BREAKING: எண்ணெய்க்கிணறுகளுக்கான விண்ணப்பம் நிராகரிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு..!

15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்த ஒஎன்ஜிசி நிறுவனத்தின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் 10 இடங்களிலும், கடலூரில் 5 இடங்களிலும் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரியிருந்தது. இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அல்லாத பகுதிகள் என்பதால் இந்த இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்கலாம் என்று ஓஎன்ஜிசி மாநில சுற்றுசூழல் குழுவிடம் அனுமதி கோரி இருந்தது.

இந்நிலையில், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரிய ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக சட்டபேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

ஓஎன்ஜிசி கோரிக்கை நேற்று நிராகரிக்கப்பட்டதாக  தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது  என கூறினார்.

author avatar
murugan