ரூ.10,999-க்கு 6000 Mah பேட்டரி, 48 எம்.பி. ட்ரிபிள் கேமரா.. அசத்தும் ரெட்மி 9 பவர்!

பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மி 9 பவர், அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முதல் விற்பனை முடிந்த நிலையில், அடுத்த விற்பனை டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், இந்தியாவில் ரெட்மி 9 பவர் போனை வெளியிட்டது. இதில் சிறப்பாக பேசப்பட்டது என்னவென்றால், அதன் பேட்டரி மற்றும் இந்த விலையில் ஸ்னாப்ட்ராகன் 662 ப்ராசஸர். இந்த மொபைல், அமேசான் வலைத்தளத்திலும், mi.com தளத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட்மி 9 பவர் டிஸ்பிலே:

ரெட்மி 9 பவர், MIUI os-ல் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது. இந்த மொபைலில் 6.53 அங்குல FHD + டிஸ்ப்ளே உள்ளது. இது 2340×1080 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டுள்ளதாகவும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷனுடன் வந்தது.

கேமரா:

கேமராவை பொறுத்தளவில், பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. செல்பி கேமராவை பொறுத்தளவில், 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரியை பொறுத்தளவில் இதில் 6,000 Mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜர் வசதியுடன் வருகிறது. அந்த சார்ஜர், மொபைல் பாக்ஸிலே வருவது குறிப்பிடத்தக்கது.

இதர அம்சங்கள்:

ரெட்மி 9 பவரில் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் ப்ராஸசரை கொண்டுள்ளது. 4 ஜி LTE, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் உள்ளது. மேலும் இதில் 512 ஜிபி வரை எஸ்ட்பேண்ட் செய்து கொள்ளலாம்.

விலை:

இந்த ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக், ஃபியரி ரெட், எலெக்ட்ரிக் க்ரீன் மற்றும் ப்ளேஜிங் கிரீன் நிறங்களில் வருகிறது.

ரெட்மி 9 பவர் (4 ஜிபி + 64 ஜிபி) – ரூ.10,999.
ரெட்மி 9 பவர் (4 ஜிபி + 128 ஜிபி) – ரூ.11,999.