ஜூன் 5 வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் உத்தரவு!

வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஜூன் 5 ம் தேதி வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட மாநிலங்களான உத்திர பிரதேசம்,பஞ்சாப்,ராஜஸ்தான்,சட்டத்தீஷ்கர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக வெப்பம் மக்களை வாட்டிவதைத்து வருகிறது.
இந்நிலையில்,ஜூன் 2 ம் தேதிக்கு பின் அனல் வெப்பக்காற்று அதிகமாகி புழுதிப்புயல்  வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.