பிரபல டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழிமொழிக்கு அங்கீகாரம்.! தூதுவராக டி. இமான் நியமனம்.!

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தாய்மொழிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை அடுத்து, அதன் தூதுவராக இசையமைப்பாளரான டி. இமான் நியமனம் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வருபவர் டி. இமான். தற்போது இவர் கன்னடாவின் பிரபல பல்கலைக்கழகமான டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். செம்மொழி அந்தஸ்து பெற்ற நமது தாய்மொழி பல நாகரீகங்களையும், கலாசாரங்களையும் உள்ளடக்கியதாகும். அதற்கு அங்கீகாரம் என்பது ஒரு தமிழனுக்கு பெருமை தான்.

இது குறித்து டி. இமான் கூறியிருப்பதாவது, இது உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு ஒரு பெருமையான தருணம். நமது மதிப்பிற்குரிய தாய்மொழியை டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் தூதராக என்னை நியமித்து கௌரவித்துள்ளனர்.. அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு ,இதன் மூலம் தாய்மொழி மீது நான் கொண்ட பற்றை மேலும் மேம்படுத்த உதவும்,வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! என்று கூறியுள்ளார்.