2,000 ரூபாய் நோட்டு தொடர்பில் ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

RBI: 2000 ரூபாய் நோட்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதியன்று மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி தகவல்

2000 ரூபாய் நோட்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதியன்று மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. மார்ச் 31, ஆண்டின் முழு வருட கணக்கு முடிவு நாளாக இருப்பதால் ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதியன்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ இயலாது. அதே போல ஏப்ரல் 2 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மற்றும் டெபாசிட் செய்யும் பணி மீண்டும் தொடங்கும் என்று மத்திய வங்கியானது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்வது மற்றும் மாற்றுவது, கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருந்த போதிலும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து வாங்கப்படுகின்றன.

அதன்படி , அகமதாபாத், பெங்களூரு, பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.