விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி..!

விதிமுறைகளை மீறியதற்காக 8 கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வங்கிகளின் சில விதிகளை மீறியதற்காக எட்டு கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. விதிகளை மீறிய வங்கிகளில் புனே மக்கள் கூட்டுறவு வங்கி, இளைஞர் மேம்பாட்டு கூட்டுறவு வங்கி, ஜல்கான் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஜிலா சககாரி கேந்திரிய வங்கி மரியடிட், உஸ்மானாபாத் ஜனதா சககாரி வங்கி, தி வைஜாபூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கி, சதாரா சககாரி வங்கி மற்றும் ஸ்ரீ சமர்த் சககாரி வங்கி போன்றவை அடங்கும்.

RBI 3

ரிசர்வ் வங்கி, இந்த வங்கிகளுக்கான ஒட்டுமொத்த அபராதத் தொகையாக ரூ.14.5 லட்சம் விதித்துள்ளது. இதில் வைஜாபூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கி மற்றும் தி சதாரா சககாரி வங்கிகளுக்கு அதிகபட்ச அபராதமாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஜல்கான் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் உஸ்மானாபாத் ஜனதா சககாரி வங்கிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

RBI 1

இறந்த தனிநபர் டெபாசிட்தாரர்களின் நடப்புக் கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு வட்டி செலுத்தாதது, ரிசர்வ் வங்கியின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கடன் வாங்குபவர்களுடன் ஒரு முறை தீர்வு (OTS) திட்டத்தில் நுழைந்தது போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த வங்கிகள் மீது அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment