ரேஷன் மானியம், விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவி குழு கடன்… நிதியமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்!

பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். இணைத்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்தநிலையில், ரேஷன் கடைகளில் உணவு பொருட்களுக்கான மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.16,262 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடியும், நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment