Wednesday, November 29, 2023
Homeதமிழ்நாடுசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி நடமாட்டம்..! கேண்டீனை மூட முதல்வர் உத்தரவு..!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி நடமாட்டம்..! கேண்டீனை மூட முதல்வர் உத்தரவு..!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வந்த கேண்டீனில் எலி சென்று, அங்குள்ள வடை, பஜ்ஜி போன்ற தின்பண்டங்கள் மேல் அமர்ந்து, அந்த தின்பண்டங்களை சாப்பிடக்கூடிய வீடியோ ஒன்று வெளியானது. 

இந்த வீடியோ சமூக  பரவி வந்த நிலையில், எலி உலா வந்த  உட்கொள்வதா என பொதுமக்கள் அந்த கேண்டீனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை பாலாஜி அவர்கள் கேண்டீனை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டார்.

சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி..!

அதோடு எலி உட்கொண்ட உணவை மக்களுக்கு விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு மக்கள் உட்கொள்ளாதவண்ணம் தூக்கி எரியுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி உலாவிய பொருட்கள் விற்பனை செய்ததற்கு மக்கள் கொந்தளித்த நிலையில், மருத்துவமனை முதல்வர் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.