ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு கேப்டனாக ரஷித் கான் நியமனம்..!

ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு கேப்டனாக ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

உலகக் டி20 கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. அடுத்த இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ரஷித்கான் டி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் அவர் 2வது இடத்தில் உள்ளார். மேலும் ஒரு ருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக, ஹஸ்மத்துல்லா ஷாகிதியும், துணைக் கேப்டனாக ரஹ்மத் ஷாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.