Rasam Recipe: ஒரு தட்டு சோறும் காலியாக கல்யாண வீட்டு ரசம் வைப்பது எப்படி.?

தினமும் நம் வீட்டில் வெள்ளை சோறுக்கு குழம்பை ஊற்றி சாப்பிடுவது போல், ரசம் ஊற்றி சாப்பிடுவதும் சிலருக்கு பிடிக்கும். சில வீடுகளில் எந்த குழம்பு வைத்தாலும் ரசமும் சேர்த்து வைத்து விடுவார்கள். அப்படி, ரசத்துக்கே தனி ரசிகர்கள் உண்டு என்று சொல்லலாம். குறிப்பாக, ரசம் மருத்துவ குணங்களுக்கும் வைக்கப்படுகிறது.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செரிமானத்திற்காகவும் முக்கிய பங்கு வகிக்கும். அதிலும் சிலர் குழம்பை கூட சுலபமாக வைத்து விடுவார்கள். ஆனால், ரசத்தை பக்குவமாக வைப்பதற்கு சிலருக்கு தெரியாது. ரசம் அதிகமாக கொதித்தாலும் நன்றாக இருக்காது, கொதிக்காவிட்டலாம் நன்றாக இருக்காது.

அதன்படி, ரசத்தை கல்யாண வீட்டில் செய்வது போல பக்குவமாக வைப்பதற்கு சில நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டும். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க…

4 பேருக்குத் தேவையான பொருள்கள்:

  • கொத்தமல்லி (தனியா) 1 டீ ஸ்பூன்
  • மிளகு 1 டீ ஸ்பூன்
  • சீரகம் 1 1/2 டீ ஸ்பூன்
  • வெந்தயம் 8 மட்டும்
  • வத்தல் 3 (செய்முறைக்கேற்ப)
  • பூண்டு 8 பற்கள்
  • புளி
  • தக்காளி 2
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இழை
  • உப்பு
  • மஞ்சள் தூள் 1/4 டீ ஸ்பூன்
  • எண்ணெய் 2 டீ ஸ்பூன்
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • பச்சை மிளகாய்
  • பெருங்காயப்பொடி

இப்பொழுது நாம் ஒரு மிக்ஸியில் 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை, 1 டீஸ்பூன் மிளகு, ஒன்றரை டீஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 8 அல்லது 9 வெந்தயம் மற்றும் 2 காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிது பரபரவென அரைக்க வேண்டும். இந்த தூளுடன் 8 பூண்டு பற்களை சேர்த்து மீண்டும் ஒரு முறை மட்டும் அரைத்து எடுக்கவும். ரொம்பவும் தூளாக இல்லாமலும் அரைபடாமலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழ அளவிலான புளியை எடுத்து தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதனை நன்றாக கரைத்து எடுத்த பின்னர், அதோடு 2 தாக்காளியை துண்டாக வெட்டி சேர்த்து கரைக்க வேண்டும். கூடவே கொஞ்சம் கறிவேப்பிலை, கொஞ்சம் கொத்தமல்லி இழை இரண்டையும் சேர்த்து கரைக்க வேண்டும். இதுதான் ரசம் தயாரிப்பில் முக்கிய பகுதி.

தாக்களி மற்றும் கொத்தமல்லி இழைகள் இரண்டையும் நன்றாக கரைத்து எடுக்க வேண்டும். பிறகு நமக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். இந்த கரைசலில் சிறிதளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்த்து விட வேண்டும். இப்பொழுது இதை நாம் தாளிக்க வேண்டும். அதற்கு கடாயில் எண்ணெய் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக வேண்டும்.

அதனுடன் 1 டீஸ்பூன் கடுகு, 2 காய்ந்த மிளகாய், 1 பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்திருந்த மிளகு, சீரகப் பொடியை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் பச்சை வாசனை போகும் வரை 1 நிமிடம் நன்றாக கிளறி விட வேண்டும். அதன்பிறகு, கரைத்து வைத்திருக்க கூடிய தாக்களி, புளி கரைசலை அதனுடன் சேர்க்க வேண்டும்.

இதனுடன் கொஞ்சமாக பெருங்காயப் பொடியை சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்க்க கூடாது. இதையடுத்து அடுப்பை குறைவான நெருப்பில் அப்படியே சிறுது நேரம் வைக்க வேண்டும். கடைசியாக, கொத்தமல்லி இழைகளை சிறிது சேர்த்து கீழே இறக்க வேண்டும். இப்பொழுது மிகவும் சுவையான கல்யாண வீட்டு ரசம் தயார். இதனை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழுங்கள்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.