பொறியியல் மாணவர்கள் கவனத்திற்கு…இன்று வெளியாகிறது ரேண்டம் எண்.!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வெளியீடு.

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுமென தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்தாண்டு 2,29,165 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 20,306 பேர் அதிகம். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வரும் ஜூன் 26ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.

இது போக, பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் வரும் ஜூன் 20ம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. செப்டம்பர் 3-ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குகிறது. இது, தொடர்பான கூடுதல் விவரங்களை theaonline.org மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.