கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளரா ரன்பீர் கபூர்.?

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா என்று

By ragi | Published: Jul 12, 2020 05:55 PM

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா என்று வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று ரன்பீர் கபூரின் சகோதரி உறுதி செய்துள்ளார்.

பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பல திரையுலக பிரபலங்கள் நலம் விசாரித்தும், குணமடைய பிரார்த்தனை செய்தும் வருகின்றனர். அடுத்ததாக பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயார் நீட்டுசிங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது குறித்த உண்மையை ரன்பீர் சிங்கின் சகோதரியான ரிதிமா கபூர் சஹானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

அதில் தனது சகோதரர் மற்றும் தயார் நலமாக இருப்பதாகவும், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியது முற்றிலும் வதந்தி தான் என்றும், ஒரு செய்தி உண்மையா என்று உறுதி செய்த பின்னர் பதிவு செய்யுங்கள், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதிலிருந்து நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் தாயாருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

 
View this post on Instagram
 

Attention seeking ??? Least verify/ clarify ! We are fit We are good ! Stop spreading rumours ! #lunatics #fakenews

A post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial) on

Step2: Place in ads Display sections

unicc