நாளை மறுநாள் தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை.! தலைமை காஜி அறிவிப்பு.!

இன்று ஷவ்வால் பிறை தெரியாததால் நாளை ரம்ஜான் பெருநாள் இல்லை. ஆகவே நாளை மறுநாள்

By manikandan | Published: May 23, 2020 11:17 PM

இன்று ஷவ்வால் பிறை தெரியாததால் நாளை ரம்ஜான் பெருநாள் இல்லை. ஆகவே நாளை மறுநாள் திங்கள் கிழமையன்று ரம்ஜான் கொண்டாடப்படும். - அரசு தலைமை காஜி.

ரம்ஜான் பண்டிகைக்காக கடந்த மாதம் முதல் நோன்பு இருந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் ரம்ஜான் பிறை நிலா தெரியும் நாளில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்று பிறை தெரியவில்லை எனபதால் ரம்ஜான் கொண்டாடப்படவில்லை. 

இது குறித்து அரசு தலைமை காஜி கூறுகையில், இன்று ஷவ்வால் பிறை தெரியாததால் நாளை ரம்ஜான் பெருநாள் இல்லை. ஆகவே நாளை மறுநாள் திங்கள் கிழமை (மே 25) அன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். 

சில மத்திய கிழக்கு நாடுகளில் பிறை இன்று தெரிந்ததால், நாளை அந்தந்த நாட்டு இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Step2: Place in ads Display sections

unicc