ராமர் பாலம் – மத்திய அரசு பதிலளிக்க அவகாசம்!

ராமர் பாலம் வழக்கில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம். 

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரும் மனு மீது பிபரவரி முதல் வாரத்தில் பதிலளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதன்படி, ராமர் பாலம் வழக்கில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய பிப்ரவரி முதல்வாரம் வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.

தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரும் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பால கட்டமைப்பு பாதிக்கப்படும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில், ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment