ரஜினியின் திருமண மண்டபம் சொத்து வரி விதிப்பு விவகாரம்! வழக்கை வாபஸ் பெற்ற ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொத்து வரிக்கு எதிரான வழக்கை   திரும்ப பெற்றுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு 6.50 லட்சம் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதி, நோட்டிஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதி எச்சரித்ததையடுத்து, சொத்து வரிக்கு எதிரான வழக்கை ரஜினி திரும்ப பெற்றுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.