உயிரிழப்புகளுக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழ்நாடு அரசு.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், வடகிழக்கு பருவமழையால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அமைச்சர், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும் என்றார்.

மேலும், மழையால் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும் என்றும் மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும் எண்ணெயும் தெரிவித்திருந்தார். பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க ஏற்கனவே அரசு விதியில் உள்ளது எனவும் கூறியிருந்தார்.

கடலூர், மயிலாடுதுறையில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். முதலமைச்சர் ஆய்வு முடித்தபின் முழுமையான நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நிவாரணம் தொகை விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மழையால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மழையால் பசு, எருமை இறந்தால் தலா ரூ.30,000, செம்மறி ஆடு, ஆடு மற்றும் பன்றி உயிரிழந்தால் ரூ.3,000 வழங்கப்படும். மழையால் உயிரிழக்கும் எருது ஒன்றுக்கு ரூ.25,000, கன்றுக்குட்டிக்கு ரூ.16,000 மற்றும் கோழி ஒன்றுக்கு ரூ.100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment