இனி ரயில்வே ஊழியர்கள் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.! தென்னக ரயில்வே அதிரடி நடவடிக்கை.!

தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். – தென்னக ரயில்வே தலைமை அதிகாரி ஆர்.என்.சிங்.

பிப்ரவரி 1ஆம் தேதி 2023- 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செயப்பட்டது . அதில் பல்வேறு நிதி அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அந்த பட்ஜெட் 2023-24இல் ரயில்வேக்கு குறிப்பிடப்பட்டுள்ள பட்ஜெட் விவரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் முக்கிய ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசித்தனர். அதில், தென்னக ரயில்வே தலைமை அதிகாரி ஆர்.என்.சிங் மற்றும் சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அந்த ஆலோசனை முடிந்து பேசிய ஆர்.என்.சிங் கூறுகையில், தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். மேலும், டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வட இந்தியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்து அவர் கூறுகையில் ,  சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அடுத்த 36 மாதங்களுக்குள் அதன் வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் தென்னக ரயில்வே தலைமை அதிகாரி ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment