#Breaking: ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.17,951 வரை போனஸ் வழங்கப்படும்!

ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.17,951 வரை போனஸ் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் மொத்தம் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3,737 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போனஸ் தொகையாக ரூ.2081.68 கோடி செலவாகும் எனவும், ஊழியருக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 வரை போனஸ் அளிக்கப்படும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.