துணைமுதல்வர்-க்கு கொரோனாத் தொற்று

பீகார் மாநில துணை முதல்வர்  சுஷில் குமார்  மோடிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீகாரில் அக்., 28ந்தேதி இடைத்தேர்தல் மொத்தம் 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

71 இடங்களுக்கு அக்.,28ந்தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 3 ஆம் தேதி 94 இடங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மீதமுள்ள 78 இடங்களுக்கு மூன்றாம் கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பீகாரில் பாஜகவின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான சுஷில் குமார் மோடி அரசியல் நடவடிக்கைகளில் சில காலமாக விடுபட்டிருந்தார்,தேர்தல் நேரத்தில் எங்கே அவர் என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தான் சுஷில் குமார்க்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து சுஷில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்

தொற்று உறுதி செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளார்.மேலும் விரைவில் குணமடைவேன் என்று பதிவிட்டுள்ளார்.

பீகார் மாநில துணைமுதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் சுஷில் குமார் மோடி ஆகிய இருவரும் கூட்டுத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.




author avatar
kavitha