புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி!

தீபாவளிக்கு மறுநாள் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் நவ.13 ஆம் தேதி அளித்து புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியிடம் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் L. சம்பத் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் திங்கட்கிழமை அன்று விடுமுறை அளித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தீபாவளி பண்டிகை 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்றது. சனி மற்றும் ஞாயிறு ஆகியவை வழக்கமான வார விடுமுறை நாட்கள்.

இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தளபதியார் தலைமையிலான தமிழக அரசு திங்கட்கிழமையை விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.  திங்கட்கிழமை   வேலை நாட்களாக கொண்டால் தீபாவளி அன்று பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

இதனால், பண்டிகையை கொண்டாட முடியாது. எனவே புதுவையிலும் திங்கட்கிழமை 13.11.2023 அன்று அரசு விடுமுறை அளித்து புதுச்சேரி மக்கள் தீபாவளி பண்டிகையை முழுமையாக மகிழ்ச்சியுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.