நாடு முழுவதும் ஊரடங்கு! புதுசேரியில் வரும் 30ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால் மக்கள் ஒத்துழைத்து அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வீட்டில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுசேரியில் வரும் 30ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற உள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இந்த பட்ஜெட் கூட்டத்தை விரைந்து குறைவான நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துதான் இந்த பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.