மீண்டும் மதுரை-ராமேஸ்வரம் இடையே இரவு நேர ரயில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை..!

மதுரை-ராமேஸ்வரம் இடையே தினமும்  கடைசி ரயில் மதுரையில் இருந்து மாலை 6.15-க்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மதுரையில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் , ராமேஸ்வரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
ஆனால் பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுகொண்டு கடந்த 2013-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 12.10க்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.இதனால் மாலை 6 மணிக்கு பிறகு மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்ல  ரயில்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது தீபாவளிப் பண்டிகையை வருவதை ஒட்டி மதுரையில் உள்ள ஜவுளிபொருள்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான உபயோகப்பொருட்கள் வாங்க கூட்டம் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் செல்கின்றனர்.
மதுரையில் மாலை 6 மணிக்கு பிறகு ரயில் இல்லாததால் மறுநாள் காலை வரை பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நிறுத்தப்பட்ட இரவு நேர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

author avatar
murugan