பொதுமக்கள் கவனத்திற்கு..! இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!

இன்று முதல் 6 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை. 

நாடு முழுவதும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பண்டிகைகள் வருவதால் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் விடுமுறை நாட்கள் மாறுபடும். அந்த வகையில், இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • 22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை
  • 23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
  • 24.10.2022 – தீபாவளி
  • 25.10.2022 – லக்ஷ்மி பூஜை- காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர் வங்கிகளுக்கு விடுமுறை
  • 26.10.2022 – கோவர்தன் பூஜை- லக்ஷ்மி பூஜை அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
  • 27.10.2022 – சித்ரகுப்த் ஜெயந்தி- காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment