யூகே நாட்டில் அனைத்து பப், உணவகங்கள் மூடல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகளவில் 10ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் அசுரவேகத்தில் கொரோனா பரவிவருகிறது. யூகே-வில் இதுவரை 3227 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், அங்குள்ள அனைத்து உணவகங்கள், பப்கள் மூடப்படும் என அதிபர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.