டெல்லியில் போராடும் 4 விவசாய தலைவர்களை கொல்ல சதி !

விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் 4 பேரைக் கொலை செய்ய நடத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது.ஆனால் திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளன.கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ,இதில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம் என்றும் அதற்காக தனியாக குழு அமைத்து அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காணலாம் எனவும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். ஆகவே நேற்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் ,மத்திய அமைச்சர்கள் நரேந்தர் சிங் தோமர்,பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆனால் இந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது.

வருகின்ற  26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று,மத்தியஅரசுக்கு எதிராக டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளது.இருந்தாலும்  டிராக்டர் பேரணி  நடைபெறும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று இரவு விவசாயிகள் போராடி வரும் சிங்கு எல்லையில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து இருப்பதை பார்த்தனர்.பின்னர் விவசாயிகள் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில்  திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.முகமூடி அணிந்த அந்த நபருடன் விவசாய சங்கத் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது குல்வந்த் சிங் என்ற விவசாயத் சங்கத் தலைவர்  கூறுகையில்,விவசாயிகள் சீர்குலைக்க சதி நடந்து வருகிறது. பிடிப்பட்ட நபரை ஹரியானா போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம்.விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் 4 பேரைக் கொலை செய்ய மர்ம  நபர் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 26-ஆம் தேதி  விவசாயிகள் சார்பில் நடைபெறும்  டிாரக்டர் பேரணியை சீர்குலைக்க  சதி நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

13 mins ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

23 mins ago

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

58 mins ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

59 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

59 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

1 hour ago