ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவின் நிகழ்ச்சி நிரல்.!

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதற்காக டன் கணக்கில் பூக்கள் மற்றும் சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விழாக்கோலம் பூண்டுள்ளது.

காலை முதல் பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறுகிறது. கோயில் திறப்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வருகிறார்.

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவின் நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காலை 10 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகியது. பின்னர், 10.30 மணி அளவில்  பிரதமர் மோடி வருகை தந்தார். காலை 10.55-க்கு பிரதமர் மோடி ராமர் கோவில் பூஜை நடக்கும் இடத்தை அடைந்தார். 7,000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி அளவில் வருகின்றனர்.

காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயிலில் பிரதமருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர் கோவில் வளாகத்தை சுற்றிப்பார்க்கவுள்ளார்.  அதனைத்தொடர்ந்து கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கி, 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) நடைபெறுகிறது.

மதியம் 1 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக கோவில்வளாகத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார். மதியம் 2.10 மணிஅளவில் பகவான் சிவனின் புராதன மந்திர் புனரமைக்கப்பட்ட குபேர் கா திலாவை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இன்று பூஜை முடிந்த பிறகு, நாளை முதல் கோயில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.