சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம் விதிப்பு!

நடிகர் சிம்பு தொடந்த வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக 1,080 நாட்களாகியும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் ரூ.1 லட்சம் அபராதத்தை விதித்து, இதனை மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அவதூறு பரப்பியதாக மைக்கேல் ராயப்பன் ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்ததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நடிகர் சிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் நடிகர் சிம்பு தங்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் படம் தோல்வி அடைந்ததற்கு சிம்புவே காரணம் எனவும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்