மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்.! எங்கு எப்படி பெறுவது.?

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கபாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்க அரசாணை வெளியாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதிப்புள்ளான மாவட்டம் என்றால் அது மயிலாடுதுறை மாவட்டம் தான். அதிலும், குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு மிகவும் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

 தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள ஆணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களான சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தமாக சுமார் 1,60,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தோராயமாக 16 கோடி ரூபாய் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பெற்றுக்கொள்ள, அந்தந்த குடும்ப அட்டைதாரர்களில் உள்ள நபர்கள் யாரேனும் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று வாங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment