கொரோனா வை கட்டுப்படுத்த இந்திய தொழிலதிபர்கள் உதவ முன்வர வேண்டும் என பிரியங்கா காந்தி அழைப்பு…

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின்  பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா டுவிட்டரில் பதிவிட்டதாவது : தற்போது கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில், சுகாதார சேவையில் இந்தியா எப்போதும் இல்லாத அளவிற்கு மாபெரும் சுமையை தற்போது சந்தித்துள்ளது. எங்கள் தேசத்துக்கும் உலகத்துக்கும் நெருக்கடியான இந்த தருணத்தில்  கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொழிலபதிபர்களும், வணிக தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.மேலும்,  அவர்களின் ஆதரவு தற்போது அவசியம் தேவை. தயவுசெய்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா பரவல் தடுப்புக்கு உபயோகிக்கும் மருந்துகளை தயாரிப்பதற்கும் , உபகரணங்கள் போன்றவற்றையும் வினியோகிப்பதற்கும் உலகில் பல தொழில் நிறுவனங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன. அதை போல் இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

author avatar
Kaliraj