நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு அதிரடியான பதிலடி கொடுத்த பிரியா மணி..!!

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு பிரியா மணி அதிரடியான பதில் கொடுத்துள்ளார். 

நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார் விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு கீழ் ஒரு ரசிகர் உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகை பிரியா மணி ” உன்னுடைய அம்மா அல்லது அக்கா தங்கையிடம் போய் கேள் என்று கூறியுள்ளார்.