கவர்ச்சி கதாநாயகி என்று சொல்லாதீங்க .. பிரியா பவானி சங்கர்.!!

நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை கவர்ச்சி கதாநாயகி என்று சொல்லாதீங்க, ஹோம்லி நாயகி என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். 

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். மேலும் இவரது நடிப்பில் குருதி ஆட்டம்,
காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, ஆகிய ததிரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இதுமட்டுமின்றி இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் கூறியது ” கமர்சியல் நாயகி என்ற எல்லைக் கோட்டை டச் பண்ணிவிட்டு போதிலும் என்னை கவர்ச்சி கதாநாயகி என்று சொல்லாதீங்க, ஹோம்லி நாயகி என்று சொல்லுங்கள். எந்த அளவிற்கு மாற்றம் நடிகையரை போன்று கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் குடும்ப பெண்ணாக பட்டும் படாமலும் நடிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.