“மன் கி பாத்” நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்தவரை பாராட்டிய பிரதமர் மோடி!

வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதை அறிந்த பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவரை பாராட்டினார்.

பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசிவருகிறார். அப்பொழுது அவர் பேசுகையில், உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி என உரையாற்றினார்.

அதனைதொடர்ந்து, நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்று கூறிய அவர், மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவர், வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதை அறிந்த பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் அவரை பாராட்டினார்.