இந்துமத கடவுள்கள் மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது…!

இந்துமத கடவுள்கள் மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது.

கடந்த 18-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா அவர்கள் இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார்.

இந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பாஜக மற்றும்  இந்து அமைப்புகள் சார்பில் சாதி மத மோதலை தூண்டும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் என புகார்கள் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், இன்று ஜார்ஜ்  பொன்னையாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  சட்டவிரோதமாக கூடுதல், சாதி மதம் மற்றும் இரு தரப்பினரிடையே விரோதங்களை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகள் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் அருமனை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ மத பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.