குடியரசுத் தலைவரின் நீலகிரி பயணம் ரத்து..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்தானது. 

குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த குடியரசு தலைவரை, தமிழக ஆளுநர், மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

president15 (1)

பின்னர் பாதுகாப்பு படையினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். குடியரசு தலைவருடன் அவரது மகளும் வந்திருந்தார். இதையடுத்து குன்னூர் ராணுவ மைய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குன்னூரில் மேகமூட்டம், சாரல் மழை போன்ற மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment