பிரீமியம் டிசைன்..50 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! இந்தியாவில் அறிமுகமாகும் ஐக்யூ 12.!

iQOO 12: ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, புதிய ஐக்யூ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் வெளியாவுள்ளது.

ஆனால், அறிமுக தேதியானது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் ஐக்யூ  12, ஐக்யூ 12 ப்ரோ என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.இதில் ஐக்யூ 12  ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து இந்த ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஐக்யூ  12 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

டிஸ்ப்ளே

ஐக்யூ  12 ஸ்மார்ட்போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி அமோலெட் கர்வுடு டிஸ்பிளே பயன்படுத்தப்படலாம். இந்த டிஸ்ப்ளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் இருக்கலாம். இதே 6.78 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே முந்தைய மாடலான ஐக்யூ  11 ஸ்மார்ட்போனிலும் உள்ளது. நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது.

பிராசஸர்

இதில் அட்ரினோ 750 (Adreno 750) கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்டு, சமீபத்தில் வெளியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்படும். இதனை ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்புடன் அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட ஓரிஜின் ஓஎஸ் 4.0 உள்ளது. இதே சிப்செட் நேற்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 14 சீரிஸில் உள்ள சியோமி 14 மற்றும் சியோமி 14 ப்ரோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

இதுவரை செவ்வக வடிவ அமைப்புடன் கேமராவை அமைப்புடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட ஐக்யூ, இந்த முறை சதுர வடிவிலான எல்இடி ஃபிளாஷுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 3x டெலிஃபோட்டோ ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 எம்பி கேமரா அடங்கும்.

முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். பனோரமா(Panorama), ஸ்லோ மோஷன்(Slow Motion), டைம் லேப்ஸ்(Time Lapse), ப்ரோ, சூப்பர்மூன்(Supermoon), அல்ட்ரா எச்டி, லாங்-எக்ஸ்போஷர் மோட்(Long-Exposure Mode), டூயல்-வியூ வீடியோ (Dual-View Video) போன்ற கேமரா அம்சங்களுடன் வரலாம்.

பேட்டரி

கிட்டத்தட்ட 200 கிராமிற்கும் குறைவான எடை கொண்ட ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் அதிக நேர பயன்பாட்டிற்காக 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆனது பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படலாம்.

அதோடு, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், வைஃபை 7, என்எஃப்சி, புளூடூத் 5.4, ரிமோட் கண்ட்ரோலுக்கான ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிற அம்சங்களும் உள்ளன.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

பிளாக், ரெட் மற்றும் வைட் என மூன்று நிறங்களில் அறிமுகமாகவுள்ள ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் எல்பிடிடிஆர் 5x ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு இரண்டு வேரியண்ட்கள் இருக்கலாம்.

அதன்படி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் அறிமுகமாகலாம். இந்த ஸ்டோரேஜை மெமரி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்திக் கொள்ள முடியும்.

இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி ஐ-க்யூ 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.54,999 என்ற விலையில் விற்பனைக்கு அறிவித்தது. இதனால் ஐக்யூ 12 விலையைப் பொறுத்தவரையில் ரூ.69,000 ஆக அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.