#Breaking : நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! சுனாமி எச்சரிக்கை.? 

நியூசிலாந்தில் ஒரு தீவில் 7.1 ரிக்ட்ர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் உள்ள ஒரு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க அளவானது 7.1 ரிக்டர் என பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும்  USGS தகவல் அளித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 300 கிமீ சுற்றளவுள்ள கடற்பரப்பில் சுனாமி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment