"பொண்ணுங்கள வாழவே விடமாட்டீங்களா"...? மிரட்டலாக வெளிவந்த IPC376 டிரைலர்.!

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நந்திதாவின் IPC376 படத்தின் டிரைலர் தமிழ்

By ragi | Published: Jul 02, 2020 06:34 PM

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நந்திதாவின் IPC376 படத்தின் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கில் மிரட்டலாக வெளியாகியுள்ளது.

அட்டகத்தி படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமான நந்திதா  தற்போது  சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் இவருடன் மதுசூதன் ரயோ, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராம்குமார் சுப்பராயன் எழுதி இயக்கும் IPC376 படத்தினை எஸ். பிரபாகர் தயாரிக்கிறார். யாதவ் ராமலிங்கம் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நந்திதா ஸ்வேதா   நடிப்பில் உருவாகியுள்ள IPC376 படத்தின் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக துணிச்சல் உள்ள கதாபாத்திரத்தில் மர்மம் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc